Skip to main content

குழுக்கள் கொள்கை

Last updated: 10th March 2021

எங்கள் ப்ளாட்ஃபார்மில் உங்கள் நண்பர்களுடனும், ஒத்த சிந்தனையுடைய பிற நபர்களுடனும் இணைவதற்கு, இப்போது ஷேர்சாட்டில் நீங்கள் குழுக்களை ("குழுக்கள்") உருவாக்கலாம் அல்லது அவற்றில் சேரலாம். குழுக்கள் என்பது, எங்கள் ப்ளாட்ஃபார்மில் தகவல்களைப் பரிமாறும், உள்ளடக்கத்தை உருவாக்கும் மற்றும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடும், ஒரே மாதிரியான ஆர்வங்களைக் கொண்ட சமூகங்கள் ஆகும்.

இந்தப் பிரிவு, குழுக்களுக்கான குறிப்பிட்ட வழிகாட்டுதல்களை அமைக்கும் அதே வேளையில், எங்கள் ப்ளாட்ஃபார்மில் உள்ள எந்தவொரு தகவல்களைப் போலவே, குழுக்களில் உங்கள் நடவடிக்கைகள் ஷேர்சாட் உள்ளடக்கம் மற்றும் சமூக வழிகாட்டுதல்கள், ஷேர்சாட் தனியுரிமை கொள்கை, மற்றும் எங்கள் ஷேர்சாட் குக்கீ கொள்கை (கூட்டாக "விதிமுறைகள்") ஆகியவற்றுக்கு உட்பட்டதாகும்.

குழுக்கள் எவ்வாறு வேலை செய்கிறது?#

எந்தவொரு தலைப்பு, அடிப்படைக்கருத்து, பிரச்சினை, அல்லது செயல்பாட்டின் அடிப்படையிலும் நீங்கள் ஒரு குழுவில் சேரலாம் அல்லது உருவாக்கலாம். கருப்பொருள், உங்களின் கடந்தகால நடத்தை, அல்லது உங்களின் நடவடிக்கைகள் எங்களின் விதிமுறைகளை மீறுவதாக இருந்தால், ஒரு குழுவை உருவாக்குவதற்கான, சேர்வதற்கான, அல்லது கலந்துகொள்வதற்கான உங்களின் கோரிக்கையை நாங்கள் நிராகரிக்கலாம்.

ப்ளாட்ஃபார்மில் ஒரு தலைப்பைத் தேடுவதன் மூலம் அல்லது குழுக்களைத் தேடுவதன் மூலம் நீங்கள் ஒரு குழுவில் சேரலாம். ஷேர்சாட்டில் ஒரு நண்பர் மூலமாக அல்லது ஒரு இணைப்பு மூலமாக ஒரு குழுவில் சேர நீங்கள் அழைக்கப்படலாம்.

ஒரு குழுவில் சேர்ந்ததும், உங்களின் நடவடிக்கைகள் மற்றும் உங்கள் குழு உறுப்பினர்களின் நடவடிக்கைகள் குறித்து அறிவிப்புகளை அவ்வப்போது நீங்கள் பெறுவீர்கள்.

ஒரு குழுவிலிருந்து விலக, நீங்கள் குழுவின் முகப்பு பக்கத்திற்குச் சென்று 'குழுவிலிருந்து விலகுக' என்ற விருப்பத்தேர்வைத் தேர்ந்தெடுக்கவும். ஒரு குழுவை விட்டு விலகியதும், உறுப்பினர்கள் பட்டியலிலிருந்து உங்கள் பெயர் நீக்கப்படும், மேலும், குழுவில் செயல்பாடுகள் குறித்த தகவல்களை நீங்கள் இனிப் பெற மாட்டீர்கள்.

குழுக்களின் வகைகள்#

இரண்டு வகையான குழுக்கள் உள்ளன: பொது மற்றும் தனிப்பட்ட.

  • பொது குழுக்கள்: பொதுக் குழுக்களைச் சுதந்திரமாகத் தேடலாம். உறுப்பினர் அல்லாதவர்களும் குழு உறுப்பினர்களைப் பார்க்கலாம் அத்துடன் குழுவில் வெளியிடப்படும் இடுகைகளையும் பார்க்கலாம்.

  • தனிப்பட்ட குழுக்கள்: குழுவில் உள்ள ஆட்களின் பட்டியலையும், அவர்கள் இடும் உள்ளடக்கத்தையும் உறுப்பினர்கள் மட்டுமே பார்க்க முடியும். ஒரு உறுப்பினரிடமிருந்து வழங்கப்படும் லிங்க் மூலமாக மட்டுமே தனிப்பட்ட குழுக்களை அணுக முடியும். உறுப்பினருரிமையின் அடிப்படையிலும் குழுக்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. சில குழுக்களில் சேர நிர்வாகியின்/ நடுவரின் முன் ஒப்புதல் தேவை, அதே வேளையில் மற்றவை அனைவரும் உறுப்பினராகும் வகையில் திறந்த நிலையில் இருக்கும்.

குழுக்களில் தகவல்தொடர்புகள்#

உரை, படங்கள், வீடியோ அல்லது ஆடியோ அரட்டைகள் மூலமாக குழு உறுப்பினர்களுடன் தகவல் தொடர்பில் ஈடுபட ஷேர்சாட் ப்ளாட்ஃபார்ம் உங்களை அனுமதிக்கிறது. குழு உறுப்பினர்களுடன் நேரடியாகப் பேசுவதற்காக அவர்களை 'பிங்' செய்வதற்கான விருப்பத்தேர்வும் உங்களுக்கு உள்ளது.

நேரடி உரையாடல்களில் கூடக் குழு உறுப்பினர்களுடனான உங்கள் நடத்தை எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளால் கட்டுப்படுத்தப்படும் ("விதிமுறைகள்"), மேலும் அதை மீறினால், பிற நடவடிக்கைகளில் அதன் விளைவாகத் தொடர்புடைய குழுவிலிருந்து நீங்கள் நீக்கப்படுவீர்கள், எங்கள் சேவைகள் இடைநிறுத்தம் செய்யப்படும் அல்லது ரத்து செய்யப்படும்.

குழுவில் நீங்கள் இடும் உள்ளடக்கம் சில நேரங்களில் மற்றவர்களுக்குத் தெரியாது. இந்து மற்ற பயனர்களின் பார்வையாளர் நிலையைச் சார்ந்திருக்கலாம் (உதாரணத்திற்கு, முதலில் பிரபலமான இடுகைகளைப் பார்க்க அவர்கள் தேர்வு செய்யலாம்). சில சந்தர்ப்பங்களில், உங்களின் இடுகை தேவையற்றது என வகைப்படுத்தப்பட்டிருந்தால், மற்ற பயனர்களால் உகந்ததல்ல என்று குறிப்பிடப்பட்டிருந்தால், அல்லது எங்கள் குழுக்களால் மதிப்பாய்வு செய்யப்படுகிறது என்றால், அதன் விளைவாக அது தடைசெய்யப்படும் அல்லது வரையறுக்கப்பட்ட பார்வையிடலுக்கு மட்டுமே கிடைக்கும். அத்தகைய சந்தர்ப்பங்களின், எங்களின் விதிமுறைகள் அல்லது உள்ளடக்கம் மற்றும் சமூக வழிகாட்டுதல்களை உங்கள் இடுகை மீறுவதாகக் கண்டறியப்பட்டால், உங்கள் இடுகையை நாங்கள் நிறுத்தி வைக்கவும் செய்யலாம்.

உங்களின் உள்ளடக்கம் நியாயமற்ற முறையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது அல்லது அதை மற்றவர்களால் பார்க்க முடியவில்லை என்று நீங்கள் கருதினால், உங்களின் குழு நிர்வாகியிடம்/ நடுவரிடம் நீங்கள் தெரிவிக்க வேண்டியிருக்கலாம்.

குழுக்களில் உங்கள் தனியுரிமையைப் பாதுகாத்தல்#

நீங்கள் சேரும் எந்தவொரு குழுவின் அமைப்புகளையும் சரிபார்க்கவும். ஒரு நிர்வாகியாக அல்லது ஒரு நடுவராக நீங்கள் உங்கள் குழுவின் அமைப்புகளை அவ்வப்போது பார்க்கலாம் மற்றும் மாற்றியமைக்கலாம்.

தனியுரிமை அமைப்புகள், ஷேர்சாட்டில் உங்கள் குழுவைத் தேடும் திறனை மாற்றியமைக்கவும், உறுப்பினர்கள் எதைப் பார்க்க முடியும் என்பதைப் பார்க்கவும் மற்றும் அவ்வப்போது நிர்வாகிகள்/ நடுவர்களை அடையாளம் காணவும் உங்களுக்கு உதவுகிறது.

ஒரு குழுவின் தனியுரிமை அமைப்புகளின் அடிப்படையில், ஒரு குழுவில் பயனர்களால் எடுக்கப்படும் நடவடிக்கைகளை, எங்கள் குழுக்கள், மூன்றாம் தரப்பு ஒப்பந்ததாரர்கள், அல்லது பிற தரப்பினரால் பார்க்க முடியும் என்பதை நினைவில் கொள்ளவும். உள்ளடக்கத்தை மட்டுப்படுத்தும் நோக்கத்திற்காக, புகார்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்காக, எங்கள் உள் விதிமுறைகள்/ கொள்கைகளை அமல் படுத்துவதற்காக, ஷேர்சாட் ப்ளாட்ஃபார்மின் செயல்பாட்டை மதிப்பாய்வு செய்வதற்காக, எங்கள் சேவைகளை மேம்படுத்துவதற்காக, அல்லது எங்கள் விதிமுறைகளால் அனுமதிக்கப்பட்டதின் படி பிற நடவடிக்கைகளை எடுப்பதற்காக, இந்த உரிமைகளைப் பயன்படுத்தலாம்.

ப்ளாட்ஃபார்மில் குழுக்களுக்கான தனியுரிமை அமைப்புகளை நிர்வாகிகள் மற்றும் நடுவர்கள் மட்டுமே புதுப்பிக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளவும். ஒரு குழுவின் தனியுரிமை அமைப்பில் அடிக்கடி மாற்றம் செய்யப்படுவதை ஷேர்சாட் தடுக்கலாம்.

ஒரு குழுவில் 3,000 உறுப்பினர்களுக்கு மேல் சேர்ந்ததும் நிர்வாகி அல்லது ஒரு நடுவரால் ஒரு குழுவின் தனியுரிமை கொள்கையை மாற்ற முடியாது. இருப்பினும், பயனரின் கோரிக்கைகளின் அடிப்படையில் ஷேர்சாட் குழுக்களால் அத்தகைய மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம்.

நிர்வாகிகள் மற்றும் நடுவர்கள்#

குழு மேலாண்மை பணிநோக்கங்கள்#

ஒரு குழுவைக் கையாளுவதென்பது, ஷேர்சாட்டின் குழுக்களில் நிர்வாகிகள் மற்றும் நடுவர்களால் (கூட்டாக "குழு மேலாளர்கள்") ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தன்னார்வப் பணி ஆகும். உறுப்பினர்களை நீக்கவும், குழுக்களை அழிக்கவும் நிர்வாகிகளுக்குக் கூடுதல் உரிமை உள்ளது. நிர்வாகிகள் மற்றும் நடுவர்கள் இருவரும், குழுவின் விதிகளை உருவாக்கலாம், குழுவின் விளக்கம்/ குறிச்சொற்களை வழங்கலாம், இடுகைகளை நீக்கலாம், புகார்களை மதிப்பாய்வு செய்யலாம் அல்லது உறுப்பினர்களைத் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யலாம்.

ஒரு குழுவை உருவாக்கும் போது அவர்கள் தாங்களாகவே தங்களை நியமித்துக் கொள்ளலாம், அல்லது முந்தைய நிர்வாகிகள்/ நடுவர்களால் நியமிக்கப்படலாம்.

இருப்பினும், குழுவுக்குள் மட்டுமே அவர்களால் அவர்களது அதிகாரத்தைச் செயல்படுத்த முடியும். நிர்வாகிகள்/ நடுவர்களுக்கும் ஷேர்சாட்டிற்கும் எந்தவொரு உறவும் இல்லை. ஷேர்சாட், அதன் விருப்பப்படி ஒரு பயனரின் நிர்வாகி/ நடுவர் உரிமைகளை எந்த நேரத்திலும், ஏதாவது விதிமுறைகளை மீறுவது உட்பட, ஏதாவது காரணத்திற்காகவும் கட்டுப்படுத்தலாம் அல்லது திரும்பப்பெறலாம்.

குழு மேலாளர்களின் சில முக்கியமான பணி நோக்கங்கள் மற்றும் பொறுப்புகள் பின்வருமாறு:

முக்கிய செயல்பாடுநிர்வாகிநடுவர்
மற்ற நிர்வாகிகளை நியமிக்கலாம்×
மற்ற நடுவர்களை நியமிக்கலாம்
இடுகைகளை இடைநிறுத்தலாம், வரம்பிடலாம்×
இடுகைகளை இடைநிறுத்தலாம், கட்டுப்படுத்தலாம் மற்றும் ஒரு குழுவின் உறுப்பினர்களை நீக்கலாம்
குழுவின் விதிமுறைகளுக்கு இணங்காத பயனர்களுக்கு எச்சரிக்கைகள்/ அறிவிப்புகளை அனுப்பலாம்

ஒரு குழுவைக் கையாள ஒப்புக்கொள்வதன் மூலம், ஒரு குழு மேலாளர் பின்வரும் ஒப்புதலை வழங்குகிறார்:

  • பொருந்தும் எங்களின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதாக

  • மற்ற குழு உறுப்பினர்களிடமிருந்து புகார்களைப் பெற்று, இடுகைகளை நீக்குவது, பயனர்களை இடைநீக்கம் செய்வது போன்ற நடவடிக்கைகள் அல்லது வழிகாட்டுதல்களை அமல்படுத்தத் தேவையான ஏதாவது பிற நடவடிக்கைகளை எடுப்பதாக

  • பதிலுக்கு மட்டுப்படுத்தல் செயல்களைச் செய்வதாக

  • குறிப்பிட்ட குழுவிற்கான விதிகளை உருவாக்கி அவற்றைச் செயல்படுத்துவதாக (நிர்வாகி அல்லது நடுவருக்குப் பொருந்தும் விதிமுறைகள் அல்லது மற்ற ஏதாவது கொள்கைகளுடன் முரணாக இல்லாத வரை)

  • அவர்களின் செயல்பாடுகளை மேற்கொள்ள எந்தவொரு ஊதியமும் பெற மாட்டார்கள் என்று

குழு மேலாளரின் மதிப்புகள் மற்றும் நல்ல பழக்கங்கள்#

குழு மேலாளர், பின்வருவனவற்றை முயற்சி செய்ய வேண்டும்:

  • அவர்களின் குழுக்களில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை குறித்த தெளிவான வழிகாட்டுதல்களை வழங்குதல்

  • செயல்நிலையில் இருத்தல். ஒரு குழு மேலாளராக உங்கள் சமுகத்திற்குத் தலைமைத்துவத்தை வழங்குதல் - பொருத்தமான இடங்களில் எச்சரிக்கைகளை வழங்குதல், பயனர்களிடம் கருத்துகளை வழங்குதல், மற்றும் தேவைப்பட்டால் இடுகைகளைக் கட்டுப்படுத்துதல் மற்றும் இடைநீக்கம் செய்தல்

  • உங்கள் சமூகத்திற்குள்ளே ஆரோக்கியமான, மற்றும் ஈடுபாடுடைய உரையாடல்களை ஊக்குவித்தல். எங்களின் சமூகக் கொள்கையை மீறும் ஏதாவது உரையாடல்கள் இருக்கிறதா என்று பார்ப்பது

  • இந்தப் பணியில் உங்களுக்கு உதவுவதற்காகக் குழு மேலாளரின் குழுவை உருவாக்கி, துணை நிர்வாகிகள் மற்றும் நடுவர்களை நியமித்தல்.

குழு மேலாளர்கள் மற்றும் பயனர்களுக்கான பொதுப் பிரச்சனைகள்#

ஷேர்சாட் குழுக்கள் சமூகத்தின் உறுப்பினராக, கவனமாக இருக்கவும், மேலும், பிற பயனர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய நடத்தையை அடையாளம் கண்டு/ அவற்றுக்கு எதிராகப் புகாரளிக்கவும். குழுக்களில் ஏதாவது நடவடிக்கை எங்களின் கொள்கைகளை மீறுவதாக நீங்கள் கருதினால், அது குறித்து எங்கள் செயலியில் எங்களிடம் அல்லது உங்கள் குழு மேலாளர்களிடம் புகாரளிக்கவும்.

தடைசெய்யப்பட்ட நடைமுறைகள்#

குறிப்பாகக் குழுக்களால் பின்வருவனவற்றில் ஈடுபட முடியாது என்பதை நினைவில் கொள்ளவும்:

  • ஊழல் / மோசடி செயல்பாடு: விரைவாகப் பணக்காரர் ஆவதற்கான திட்டங்கள், போலியான வேலைகள், அல்லது பயனர்களைத் தவறாக வழிநடத்தும், மோசடி செய்யும் அல்லது ஏமாற்றும் பிற நடவடிக்கைகள் போன்ற நடவடிக்கைகளை ஊக்குவித்தல்.

  • சட்டவிரோதமான பொருட்கள் அல்லது உரிய அதிகார அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள பொருட்கள்: பயனருக்கு, வழங்குவதற்கான அதிகாரமில்லாத, சட்டவிரோதமான சரக்குகள் மற்றும் சேவைகள் அல்லது உரிய அதிகார அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள சரக்குகள் அல்லது சேவைகளின் விற்பனையை ஊக்குவித்தல். உதாரணத்திற்கு, சூதாட்டம், சட்டவிரோத லாட்டரிகள், போதை பொருட்கள் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களின் விளம்பரம், அல்லது பரிந்துரை மருந்துகளின் விற்பனை.

  • பொய்யான தொடர்பு: குழுக்கள் அல்லது குழுக்களில் செயல்பாடுகள், அவ்வாறு செயல்பட அங்கீகரிக்கப்பட்டிருந்தாலொழிய, ஒரு தனிநபர், பிராண்டு, அல்லது அமைப்பின் சார்பாக அவர்கள் செயல்படுகிறார்கள் என்ற எண்ணத்தைக் கொடுக்கக்கூடாது.

  • தீங்கு விளைவிக்கும் பேச்சு அல்லது தனிநபர்களை ஊக்குவித்தல்: குற்ற நடவடிக்கை அல்லது அத்தகைய நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் தனிநபர்கள் / அமைப்புகளைக் குழுக்கள் ஊக்குவிக்கக் கூடாது. எந்தவொரு குற்ற நடவடிக்கையையும், வெறுப்பைத் தூண்டும் பேச்சையும், வன்முறை மற்றும் சட்டவிரோதமான நடவடிக்கைகளையும் ஏற்பாடு செய்யக் குழுக்களை நீங்கள் பயன்படுத்தக் கூடாது.

  • சம்மதமற்ற நடவடிக்கைகளை ஊக்குவித்தல்: எந்தவொரு நபரையும் சுரண்டும் அல்லது ஆபத்தில் தள்ளும், அல்லது விபச்சாரச் சேவைகளை ஊக்குவிக்கும் அல்லது பரிந்துரைக்கும் நோக்கத்திற்காகப் படங்களை இடுகையிட உதவும் உள்ளடக்கங்கள்; குழந்தை ஆபாசப்படங்கள் (குழந்தை ஆபாசப்படங்களை உருவாக்குதல், விளம்பரப்படுத்துதல், மகிமைப்படுத்துதல், அனுப்புதல் அல்லது ப்ரவுஸ் செய்தல் உட்பட ஆனால் அவை மட்டுமல்லாமல் மற்றவையும்); கற்பழிப்பு, கூட்டு கற்பழிப்பு, பாலியல் ரீதியிலான புறப்பொருளாக்கம், சம்மதமற்ற நடவடிக்கைகள் மற்றும் பாலியல் ரீதியில் தவறாக நடந்துகொள்ளுதல் பற்றிய உள்ளடக்கம், ஆகியவற்றைக் குழுக்கள் ஊக்குவிக்கக் கூடாது.

தரவுகள் சேகரிப்பு#

இந்தத் தரவுகள் சேகரிப்பு நடவடிக்கையானது உங்களால் தான் செய்யப்படுகிறதே தவிர, ஷேர்சாட்டால் அல்ல என்பதைப் பயனர்களிடம் தெளிவாகவும், வெளிப்படையாகவும் தெரிவிக்கவும். உங்களின் கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்களுக்காக மட்டுமே தரவுகள் பயன்படுத்தப்பட வேண்டும். சேகரிக்கப்பட்ட எந்தவொரு தகவல்களையும், குறிப்பிடப்பட்ட நோக்கங்களுக்காக, பொருந்தும் சட்டங்களுக்கு இணங்கப் பயன்படுத்தவும்.

ஷேர்சாட்டிடமிருந்து குறிப்பிட்ட ஒப்புதல்கள் இல்லாமல் – எங்கள் குழுவில் தானியக்கமாக்கப்பட்ட மற்றும் பெருந்திரளான தரவுகளைச் சேகரிப்பதிலிருந்து பயனர்கள் தடை செய்யப்பட்டுள்ளனர்.

விளம்பரங்கள், போட்டிகள், மற்றும் பிற நடவடிக்கைகள்#

போட்டிகள், விளையாட்டுகள் அல்லது பிற விளம்பர நடவடிக்கைகளை நடத்தக் குழுக்களை நீங்கள் பயன்படுத்தலாம என்றாலும், அத்தகைய நடவடிக்கைகள், பொருந்தும் சட்டங்களுக்கு இணங்குவதை உறுதி செய்வது பயனர்களின் பொறுப்பாகும். பிராண்டுகள், அதிகார அமைப்புகள் மற்றும் தேவைக்கேற்ப மற்ற ஏதேனும் தரப்பிடமிருந்து - தேவையான அனுமதிகளை ஒவ்வொரு போட்டி விளையாட்டும் பெற்றிருக்க வேண்டும். வழங்கப்படும் எந்தவொரு பரிசுகளும், பொருந்தும் இந்தியச் சட்டங்களுடன் இணங்க வேண்டும்.

இந்த நடவடிக்கைகள் ஷேர்சாட்டால் நடத்தப்படவில்லை என்றும், ஷேர்சாட் இதற்குப் பொறுப்பில்லை என்றும் போட்டிகள் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.

பிராண்டுகள் மற்றும் அறிவுசார் சொத்து பயன்பாடு#

பிராண்டு பெயர்கள், வர்த்தகக்குறியீடுகள், பதிப்புரிமை மற்றும் பிற அறிவுசார் சொத்தை, பொருந்தும் சட்டங்களுக்கு இணங்கப் பயன்படுத்தவும். ஒரு பிராண்டு/ அமைப்புடனான உங்கள் தொடர்பு அல்லது உங்கள் நடவடிக்கைகளின் வணிக இயல்பு குறித்து, அவசியமான இடங்களில் வெளிப்பாடுகள் மற்றும் பொறுப்புத் துறப்புகளையும் வழங்கவும்.

உங்களின் குழு ஒரு ரசிகர்/ஆதரவாளர் குழுவாக இருக்கும் இடத்தில் அல்லது சில அமைப்புகள், தனிநபர்கள், அல்லது பிராண்டுகள் பற்றி கலந்துரையாட வேண்டும் என்றால், பொறுப்புத் துறப்புகளை வழங்கி, நீங்கள் அத்தகைய நடிகர்கள், தனிநபர்கள், பிராண்டுகள் அல்லது அமைப்புகளுடன் தொடர்புடையவரல்ல என்றும், அவர்களை எந்த விதத்திலும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்றும் தெளிவாகக் குறிப்பிடவும்.

குழுவின் பெயர்கள் மற்றும் அடையாளங்கள்#

குழுவின் காரணம் மற்றும் நோக்கத்தைக் குழு பெயர்கள் தெளிவாகக் குறித்துக் காட்ட வேண்டும். அவை, சம்பந்தப்பட்ட இடங்களில், தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தக்கூடாது, மிகவும் பொதுவான இயல்புடையதாக இருக்க வேண்டும், மற்றும் சட்டவிரோதமான நடவடிக்கைகள் அல்லது சட்டவிரோதமான / தீங்கு விளைவிக்கும் நபர்கள் அல்லது அமைப்புகளை ஊக்குவிக்கக் கூடாது.

வேலை வாய்ப்பு குறித்த இடுகைகள்#

Please provide clear directions in any job or internship positions offered on groups – on how to apply, eligibility criteria, contact details and other such information. Groups cannot be used to conduct job scams, or other deceptive practices. Moreover, you cannot advertise for illegal, fraud or harmful jobs, in violation of applicable laws. Job postings must also not unlawfully discriminate against individuals.

குழு மற்றும் பயனர் நடத்தை குறித்துப் புகாரளித்தல்#

இந்தக் குழு கொள்கை உட்பட எங்கள் விதிமுறைகள் அல்லது பொருந்தும் சட்டங்களுக்கு ஏதாவது நடவடிக்கைகள் இணங்கவில்லை என்று பயனர்கள் நம்பினால் அது குறித்து அவர்கள் புகாரளிக்கலாம். (i) குழு மேலாளரிடம், அல்லது (ii) சில சந்தர்ப்பங்களில் ஷேர்சாட்டிடம் புகார்களை அளிக்கலாம்.

ஒரு குழு மேலாளராக, ஒரு குழுவில் உங்களிடம் ஏதாவது நடவடிக்கை குறித்து யாராவது புகாரளிக்கும் போது உங்களுக்கு அது தெரிவிக்கப்படும். நீங்கள் அந்தப் புகாரைப் பின்வருவன மூலம் கையாளலாம்:

  • எந்த நடவடிக்கையையும் எடுக்காமல் இருக்க முடிவு செய்வதன் மூலம்,
  • பயனருக்கு எச்சரிக்கை வழங்குவதன் மூலம்
  • இடுகையை மட்டுப்படுத்துவதன் மூலம்
  • பயனரை இடைநீக்கம் செய்வதான் மூலம்
  • குழுவிலிருந்து பயனரை நீக்குவதன் மூலம்.

கூடுதலாக, குழுவில் உள்ள செயல்பாடுகள் குறித்த பயனர்களின் புகார்களையும் நாங்கள் மதிப்பாய்வு செய்யலாம். அத்தகைய சந்தர்ப்பங்களில் நாங்கள் பின்வருவன மூலம் விதிகளை அமல்படுத்தலாம்:

  • சில விதிகளை அமல்படுத்தக் கேட்பதன் மூலம் அல்லது எச்சரிக்கைகளை வழங்குவதன் மூலம்
  • தற்காலிக இடைநீக்கங்கள் மூலம்
  • சலுகைகளை நீக்குவதன் மூலம்
  • உள்ளடக்கத்தை நீக்குவது அல்லது உள்ளடக்கத்தின் அணுகல்/ பார்ப்பவர்களின் எண்ணிக்கையில் வரம்பிடுவதன் மூலம்
  • குழுக்களிலிருந்து பயனர்களை நீக்குவதன் மூலம்
  • ஒரு குழுவில் புது உறுப்பினர்களின் சேர்க்கைகளைத் தடுப்பதன் மூலம்
  • குழுவைத் தடை செய்வதன் / மூடுவதன் மூலம்

பொதுவானவை#

அர்த்தமுள்ள தொடர்புகளை உருவாக்க, ஒத்த சிந்தனை கொண்ட நபர்களுடன் தகவல் தொடர்பில் ஈடுபட, உங்களின் கருத்துகள் மற்றும் ஆர்வங்களைப் பகிர்ந்துகொள்ளுதல், அத்துடன் நுண்ணறிவுமிக்க கலந்துரையாடல்களில் ஈடுபட ஒரு கட்டுமானக் கருவியாகப் ப்ளாட்ஃபார்மில் உள்ள குழுக்களைப் பயன்படுத்தலாம். பாதுகாப்பான வளரும் சமூகத்தை வளர்க்க, மேற்கண்ட வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிப்பது மற்றும் ப்ளாட்ஃபார்மின் விதிமுறைகளுக்கு இணங்குவது பொருத்தமானதாகும். குழுக்களின் அம்சம் மூலம் பாதுகாப்பான இடத்தை உருவாக்கவும், ப்ளாட்ஃபார்மில் பன்முகத்தன்மை மற்றும் சேர்த்தலை ஊக்குவிக்கவும் உதவ எங்கள் பயனர்களை நாங்கள் ஊக்குவிக்கிறோம். எங்கள் பயனர்களைக் கனிவாக, மரியாதையாக இருக்கும்படி மற்றும் வெறுப்பைத் தூண்டும் பேச்சு, துன்புறுத்தல், கொடுமைப்படுத்துதல், தேவையற்ற மற்றும் சட்டவிரோதமான நடவடிக்கைகளிலிருந்து விலகி இருக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.