எனது சுயவிவரம் தனிப்பட்டதாக இருக்கும் போது என்ன நடக்கும்?
தானாகப் பின்தொடர முடியாது
உங்களைத் தொடர்புகொள்வதற்கு அல்லது உங்களின் சுயவிவரத்தைப் பார்ப்பதற்குப் பயனர்கள் உங்களுக்கு ஒரு பின்தொடரல் கோரிக்கையை அனுப்ப வேண்டும்.
பூட்டப்பட்ட சுயவிவர படம்
உங்களைப் பின்தொடராத பயனர்களால் உங்களின் சுயவிவர படத்தை விரிவாக்கவோ அல்லது அதைப் பயன்படுத்திப் போலி கணக்கை உருவாக்கவோ முடியாது.
இடுகைகளின் தனியுரிமை
உங்கள் இடுகைகளில் தேவையற்ற அல்லது தொடர்பற்ற கருத்துகளை இடுவதிலிருந்து அந்நியர்களைத் தடுக்கிறது. உங்கள் இடுகைகள் உங்களின் சொந்தச் சுயவிவரத்தில் மற்றும் உங்களைப் பின்தொடர்பவர்களின் பின்தொடர் ஊட்டத்தில் மட்டுமே தெரியும். மேலும், உங்கள் இடுகைகளை யாராலும் பதிவிறக்கம் செய்ய முடியாது.
தேவையற்ற மெசேஜ்கள் இருக்காது
நீங்கள் அங்கீகரிக்கும் நபரால் அல்லது நீங்கள் முதலில் உரையாடலைத் தொடங்கும் நபரால் மட்டுமே உங்களுக்கு மெசேஜை அனுப்ப முடியும். இது உங்கள் இன்பாக்ஸில் அந்நியர்களிடமிருந்து தேவையற்ற மெசேஜ்கள் பெறப்படுவதை நிறுத்துகிறது/குறைக்கிறது.
தனிப்பட்ட தகவல்கள் எதுவும் வெளிப்படையாக இல்லை
உங்களின் பாலினம், ராசி, நீங்கள் சேர்ந்துள்ள அல்லது நிர்வாகியாக உள்ள குழுக்கள், சிறந்த படைப்பாளி நிலை, நீங்கள் பின்தொடர்பவர்களின் மற்றும் உங்களைப் பின்தொடர்பவர்களின் பட்டியல் இதில் அடங்கும். உங்களைப் பின்தொடர்பவர்களால் மட்டுமே இந்தத் தகவல்கள் அனைத்தையும் பார்க்க முடியும்.