காயின்கள் கொள்கை
Last updated: 15th December 2023
https://sharechat.com/ -இல் உள்ள எங்கள் வலைதளம் மற்றும்/அல்லது ஷேர்சாட் மொபைல் செயலியில் (கூட்டாக, "ப்ளாட்ஃபார்ம்") இருக்கும் எங்கள் காயின்கள் அம்சத்தின் ("காயின்கள் அம்சம்") உங்கள் பயன்பாட்டை இந்த காயின்கள் கொள்கை ("காயின்கள் கொள்கை") நிர்வகிக்கிறது, மேலும் இது, மொஹல்லா டெக் பிரைவேட் லிமிடெட், நார்த் டவர் ஸ்மார்ட்வொர்க்ஸ், வைஷ்ணவி டெக் பார்க், சர்வே எண் 16/1 & எண் 17/2 அம்பலிபுரா கிராமம், வர்தூர் ஹோப்ளி, பெங்களூரு நகர்ப்புறம், கர்நாடகா - 560103 என்ற முகவரியில் பதிவு செய்யப்பட்ட அலுவலகத்தைக் கொண்டு இந்தியச் சட்டங்களின் கீழ் நிறுவப்பட்ட ஒரு தனியார் நிறுவனமான மொஹல்லா டெக் பிரைவேட் லிமிடெட் ("ஷேர்சாட்", "நிறுவனம்", "நாங்கள்", "எங்களை" மற்றும் "எங்களின்") என்ற நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. "நீங்கள்" மற்றும் "உங்களின்" என்ற சொற்கள் ப்ளாட்ஃபார்மின் பயனரைக் குறிக்கிறது.
நீங்கள் உங்கள் நண்பர்களுடன் தொடர்பில் இருக்கவும், உங்களுக்கு விருப்பமான பிராந்திய மொழியில் படங்கள், வீடியோக்கள், இசை, ஸ்டேடஸ் அப்டேட்கள், மற்றும் பலவற்றைப் பகிர எங்கள் ப்ளாட்ஃபார்ம் உங்களுக்கு உதவுகிறது. எங்களின் ப்ளாட்ஃபார்மில் கிடைக்கும் இடுகைகள், படங்கள், வீடியோக்களைக் காட்டவும், உள்ளடக்கத்தைப் பரிந்துரைக்கவும், நாங்கள் உங்களின் விருப்பமான உள்ளடக்கத்தைப் புரிந்துகொண்டு, உங்களின் செய்தியூட்டத்தைத் தனிப்பயனாக்குகிறோம் ("சேவை/சேவைகள்").
காயின்கள் எவ்வாறு வேலை செய்கிறது?
மெய்நிகர் பரிசுகள்/டிஜிட்டல் பொருட்களுக்கான (ஸ்டிக்கர்கள், ஜிஃப்கள், பேனர்கள் முதலியன போன்றவை) உரிமத்தை இப்போது நீங்கள் எங்கள் பயனர்களுக்கு வழங்கலாம் ("பரிசுகள்"). எங்களின் அங்கீகரிக்கப்பட்ட பணம் செலுத்தல் முறைகளைப் பயன்படுத்தியும், எங்களால் கிடைக்கச்செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட பணம் செலுத்தல் வழங்குநர் மூலமாகவும், காயின்களை ("காயின்கள்/காயின்") பெறுவதன் மூலம் அத்தகைய பரிசுகளை நீங்கள் அனுப்பலாம். காயின்கள்/ பரிசுகளை ரொக்கமாக, அல்லது சட்டமுறைச் செலவாணியாக மாற்ற முடியாது என்பதை நினைவில் கொள்ளவும்.
காயின்களை வாங்குதல்.
வாங்கும் இடத்தில் காயின்களின் விலை காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். காயின்களுக்கான அனைத்துக் கட்டணங்கள் மற்றும் பணம் செலுத்தல்களும், வாங்கும் இடத்தில் எங்களால் அமைக்கப்பட்ட தொடர்புடைய பணம் செலுத்தல் முறைகளின் மூலம் குறிப்பிடப்பட்ட கரன்ஸியில் செலுத்தப்படும்.
உங்களால் வாங்கப்படும் எந்தவொரு காயின்களுக்கும் நீங்கள் தான் பொறுப்பாவீர்கள். உங்களால் பணம் செலுத்தப்பட்டதுடன், உங்களால் வாங்கப்பட்ட காயின்கள் உங்களின் பயனர் கணக்கில் வரவு வைக்கப்படும்.
காயின்களின் பயன்பாடு
பயனர்கள் தங்கள் சுயவிவரங்களைத் தனிப்பயனாக்க பயன்படுத்தக்கூடிய கடை பொருட்களை வாங்கக் காயின்களைப் பயன்படுத்தலாம். மற்ற பயனர்களுக்குப் பரிசுகளை அனுப்பவும் காயின்களைப் பயன்படுத்தலாம். காயின்களை ரொக்கமாக, அல்லது சட்டமுறைச் செலவாணியாக, அல்லது எந்தவொரு மாநிலத்தின், பிராந்தியத்தின் கரன்ஸியாக, அல்லது ஏதாவது அரசியல் நிறுவனமாக, அல்லது வேறு ஏதாவது வடிவிலான வரவாக மாற்ற முடியாது.
காயின்களை எங்கள் சேவைகளின் ஒரு பகுதியாக எங்கள் ப்ளாட்ஃபார்மில் மட்டும் தான் பயன்படுத்த முடியும், மேலும் இதை எங்களால் குறிப்பிடப்பட்டவை தவிர மற்ற விளம்பரங்கள், கூப்பன்கள், தள்ளுபடிகள் அல்லது சிறப்பு சலுகைகளுடன் ஒருங்கிணைக்க முடியாது அல்லது சேர்த்துப் பயன்படுத்த முடியாது.
ப்ளாட்ஃபார்மில் வேறு எந்தப் பயனருக்கும் அல்லது எந்த மூன்றாம் தரப்பினருக்கும் எந்தவொரு காயின்களையும் ஒதுக்கவோ அல்லது மாற்றவோ கூடாது. எங்களைத் தவிர வேறு யாரும் எந்தவொரு காயின்களையும் விற்பனை, பரிமாற்ற வர்த்தகம், ஒதுக்கீடு, அல்லது பிற ஏற்பாட்டில் ஈடுபடுவது வெளிப்படையாகத் தடைசெய்யப்பட்டுள்ளது. இந்தத் தடையை மீறினால் அதன் விளைவாகப் ப்ளாட்ஃபார்மில் உங்களின் கணக்கு நிறுத்தப்படும், உங்கள் கணக்கிலிருந்து காயின்கள் பறிமுதல் செய்யப்படும், மற்றும்/அல்லது சேதங்கள், வழக்காடல் மற்றும் பரிவர்த்தனை செலவுகளுக்கு நீங்கள் பொறுப்பாகக்கூடும்.
திரட்டப்பட்ட காயின்கள் சொத்தாக அமையாது மற்றும் அவற்றை உரிமை மாற்றம் செய்ய முடியாது: (அ) மரணத்தின் போது; (ஆ) குடும்ப விஷயத்தின் ஒரு பகுதியாக; அல்லது (இ) இல்லையெனில் சட்டச் செயல்பாட்டின் மூலம்.
நீங்கள் இந்தக் காயின்கள் கொள்கையை மீறியுள்ளீர்கள், பொருந்தும் சட்டம் அல்லது ஒழுங்குமுறையை மீறியுள்ளீர்கள் என்று நாங்கள் நம்பும் இடத்தில் அல்லது சட்டரீதியான, பாதுகாப்பு அல்லது தொழில்நுட்பக் காரணங்களுக்காக எங்களிடம் நியாயமான காரணம் இருக்கும் இடத்தில், அத்தகைய காயின்களை நிர்வகிக்கும், ஒழுங்குபடுத்தும், கட்டுப்படுத்தும், மாற்றியமைக்கும் மற்றும்/அல்லது நீக்கும் உரிமை எங்களிடம் உள்ளது என்றும், நாங்கள் இந்த உரிமையைச் செயல்படுத்துவதின் அடிப்படையில் உங்களிடம் எங்களுக்கு எந்தவொரு பொறுப்பும் இல்லை என்றும் நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். எங்களின் சேவைகளிலிருந்து காயின்களை முழுமையாக நீக்க நாங்கள் முடிவு செய்தால், உங்களிடம் நியாயமான அறிவிப்பை வழங்கிய பின்னர் அதை நாங்கள் செய்வோம்.
நாணயங்கள் பயனரால் வாங்கிய/ரசீது தேதியிலிருந்து 365 நாட்களில் காலாவதியாகிவிடும்.
பரிசுகள் எவ்வாறு வேலை செய்கிறது?
ப்ளாட்ஃபார்மில் உங்கள் கணக்கில் கிடைக்கும் காயினைப் பயன்படுத்திப் பரிசுகளை நீங்கள் பெறுவீர்கள். ப்ளாட்ஃபார்மில் இந்தப் பரிசுகளை நீங்கள் மற்ற பயனர்களுக்கு அனுப்பலாம் அத்துடன் மற்ற பயனர்களிடமிருந்து பரிசுகளைப் பெறலாம். உங்களால் அனுப்பப்பட்ட அல்லது பெறப்பட்ட பரிசுகளை ரொக்கமாக, அல்லது சட்டமுறைச் செலவாணியாக மாற்ற முடியாது என்பதை நினைவில் கொள்ளவும். ஒரு பயனர் மற்றொரு பயனருக்குப் பரிசை அனுப்பும் போது, பெறப்படும் பரிசின் மதிப்பானது பெறுநரின் கணக்கில் டைமண்ட்ஸ் ("டைமண்ட்ஸ்") வடிவில் காட்டப்படும். டைமண்ட்ஸை காயின்களாக மாற்ற முடியாது மற்றும் காயின்களை டைமண்டகளாக மாற்ற முடியாது. ஷேர்சாட், அதன் விருப்பப்படி அத்தகைய டைமண்டகளின் மதிப்பை மாற்றுவதற்கான உரிமை அதற்கு உள்ளது.
பரிசுகளை வாங்குதல்
டிஜிட்டல் தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் சில அம்சங்களுக்கு வரையறுக்கப்பட்ட உரிமமாகப் பரிசுகள் அமைகிறது. எவ்வொரு காயின் மற்றும் பரிசுக்கு இடையிலான மாற்ற/ மீட்டல் விகிதம் எங்களின் ப்ளாட்ஃபார்மில் காட்சிப்படுத்தப்படும்.
வெளியிடப்பட்ட விலைகளில் உங்கள் அதிகார வரம்பின் பொருந்தும் சட்டங்களின் கீழ்த் தேவைப்படும் வரிகளும் அடங்கும்.
எந்தவொரு பொதுவான அல்லது குறிப்பிட்ட சூழ்நிலைகளிலும், எங்கள் சுய விருப்பத்தின் படி ஏற்றதாக நாங்கள் கருதும் அத்தகைய பரிமாற்ற விகிதத்தை நிர்வகிக்கும், ஒழுங்குபடுத்தும், கட்டுப்படுத்தும், மாற்றியமைக்கும் மற்றும்/அல்லது நீக்கும் முழு உரிமையும் எங்களிடம் உள்ளது என்றும், நாங்கள் இந்த உரிமையைச் செயல்படுத்துவதின் அடிப்படையில் உங்களிடம் எங்களுக்கு எந்தவொரு பொறுப்பும் இல்லை என்றும் நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.
இந்தக் காயின் கொள்கையில் குறிப்பிடப்பட்டிருந்தாலொழிய, காயின்களை பரிசுகளாக மாற்றுவது/ மீட்பது அனைத்தும் இறுதியானதாகும். எந்த விதத்திலும் நாங்கள் பணத்தைத் திருப்பித் தருவதில்லை.
பரிசுகளைக் காயின்களாக அல்லது பணமாக மாற்ற அல்லது பரிமாற்றம் செய்ய முடியாது அல்லது எந்தக் காரணத்திற்காகவும் எங்களால் பணம் திருப்பி வழங்கப்படாது அல்லது செலவு ஈடு செய்யப்படாது.
எந்தவொரு பயனராலும் பரிமாற்றம் செய்யப்படும் அல்லது பெறப்படும் பரிசுகள் சொத்தாக அமையாது, மேலும், அவற்றை உரிமை மாற்றம் செய்ய முடியாது: (அ) மரணத்தின் போது; (ஆ) குடும்ப விஷயத்தின் ஒரு பகுதியாக; அல்லது (இ) இல்லையெனில் சட்டச் செயல்பாட்டின் மூலம்.
ஒரு பயனரால் பரிமாற்றம் செய்யப்படும் அல்லது பெறப்படும் பரிசுகள் சிதைவுற்றதாகவோ அல்லது சேதமடைந்ததாகவோ எங்களின் சுய விருப்பப்படி எங்களால் தீர்மானிக்கப்பட்டால், முன்னர்ப் பரிமாற்றம் செய்யப்பட்ட பரிசுகளின் நகல்களை நாங்கள் மாற்றித் தரலாம். சிதைந்த அல்லது சேதமடைந்த பரிசைத் திரும்ப வழங்குவதற்குக் கூடுதல் கட்டணங்களை நாங்கள் வசூலிப்பதில்லை. சிதைந்த அல்லது சேதமடைந்த பரிசை நீங்கள் பெற்றால், contact@sharechat.co -இல் எங்களைத் தொடர்புகொள்ளவும்.
காயின்கள் அம்சத்தை நீங்கள் தவறாகப் பயன்படுத்துகிறீர்கள் எனக் கருதப்பட்டால் அல்லது இந்தக் காயின்கள் கொள்கையை நீங்கள் மீறினால் உங்கள் கணக்கை நிறுத்த அல்லது உங்களுக்கு எதிராகப் பொருத்தமான மற்ற ஏதாவது நடவடிக்கைகளை எடுக்க எங்களுக்கு உரிமை உள்ளது.
ப்ளாட்ஃபார்மில் அல்லது வேறு வழியில் எந்தவொரு பயனரிடமிருந்தும் எந்தவொரு பொருட்களையும் அல்லது சேவைகளையும் பெறுவதற்கு ஈடாக எந்தவொரு பரிசையும் அல்லது காயினையும் பயன்படுத்த உங்களுக்கு அனுமதி இல்லை.
செல்வாக்குடையவர் அல்லது மற்ற பயனரால் உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்தை நீங்கள் எவ்வாறு பயன்படுத்தலாம்
பயனர் அல்லது செல்வாக்குடையவரால் உருவாக்கப்பட்ட உள்ளடக்கம் ("படைப்பாளி") தொடர்பாக, அத்தகைய படைப்பாளியால் பதிவேற்றம் செய்யப்பட்ட படைப்பாளி உள்ளடக்கத்தின் ஒரு பொருட்கூறுக்கான உங்களின் பாராட்டை வழங்க அல்லது அதை மதிப்பிட நீங்கள் பரிசுகளைப் பயன்படுத்தலாம். சேவைகளில் இந்தச் செயற்கூறு கிடைக்கிறது, மேலும், "அனுப்புக" பொத்தானைக் க்ளிக் செய்வதன் மூலம் படைப்பாளிகளுக்கு நீங்கள் பரிசுகளை வழங்கலாம்.
படைப்பாளிக்கு அனுப்பவேண்டிய பரிசைத் தேர்ந்தெடுத்து "அனுப்புக" பொத்தானைக் க்ளிக் செய்யும் போது, இந்தப் பரிசு படைப்பாளியின் கணக்கிற்கு அனுப்பி வைக்கப்படும்.
நீங்கள் ஒரு படைப்பாளிக்குப் பரிசை வழங்கும் போது, அதை நீங்கள் வெளிப்படையாகச் செய்கிறீர்கள் என்பதைக் கவனத்தில் கொள்ளவும். எனவே, ப்ளாட்ஃபார்மின் மற்ற பயனர்களால் (பரிசைப் பெறுபவர் உட்பட) உங்களின் பெயரையும் பரிசின் விவரங்களையும் பார்க்க முடியும்.
புகாரளித்தல்
இந்தக் காயின்கள் கொள்கை, பயனரால் மீறப்படுவதை நீங்கள் கவனித்தால், அது குறித்து contact@sharechat.co -இல் புகாரளிக்கவும்.
காயின்கள் கொள்கை மீறல்கள் குறித்துப் பல புகார்கள் வந்தால், எங்களுடனான உங்கள் கணக்கை நிறுத்தவும், எங்களுடன் பதிவு செய்வதிலிருந்து உங்களைத் தடுக்கவும் நாங்கள் கட்டாயப்படுத்தப்படலாம். அத்தகைய நீக்கத்திற்கு எதிராக நீங்கள் மேல்முறையீடு செய்ய விரும்பினால், contact@sharechat.co -இல் எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.
பயன்படுத்தப்படாத அல்லது மீட்கப்படாத எந்தவொரு காயின்களுக்கும் அல்லது பரிசுகளுக்கும் பணம் திருப்பிக் கொடுக்கப்படாது, எனவே உங்கள் கணக்கை நிறுத்துவதற்கு முன்னர் அவற்றைப் பயன்படுத்துமாறு நாங்கள் உங்களைப் பரிந்துரைக்கிறோம்.
பயனர்களுக்கான குறிப்பு:
நீங்கள் நாணயங்களை வாங்குவதற்கு டேக்ஸ் இன்வாய்ஸ் தேவைப்பட்டால், தயவுசெய்து உங்கள் ஆர்டர் ஐடி - ஐ மேற்கோள் காட்டி ar@sharechat.co க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள், எங்கள் குழுவினர் அதை உங்களுக்கு விரைவில் வெளியிடுவார்கள்.
காயின்கள்/ பரிசுகள் பயனர்களால் வாங்கப்பட வேண்டிய தனிப்பட்ட பொருட்களாகக் கருதப்படுவதில்லை, ஆனால் ப்ளாட்ஃபார்மால் வழங்கப்பட்ட பொருட்களுக்கான உரிமமளிக்கப்பட்ட அணுகலாகக் கருதப்படுகிறது.
எங்கள் தளத்திலிருந்து உங்கள் கணக்கை நீக்கியவுடன் உங்கள் கணக்குடன் தொடர்புடைய காயின்கள் மற்றும் கிஃப்ட்கள் அழிந்துவிடும்.
இணையத்தில் வர்த்தகம் செய்யக் காயின்களைப் பயன்படுத்த முடியாது.
ப்ளாட்ஃபார்மில் நீங்கள் வாங்கும் காயின்கள்/ பரிசுகளுக்கு நீங்கள் தான் முழுப் பொறுப்பாவீர்கள், மேலும், அத்தகைய காயின்கள்/ பரிசுகளைப் பொறுத்தவரை நாங்கள் எவ்விதத்திலும் பொறுப்பாகமாட்டோம் என்று நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.
எது விதிமீறலாக அமையும் என்பதை எங்களின் சுய விருப்பப்படி நிர்ணயிக்கும் உரிமை எங்களுக்கு உள்ளது.
எங்களின் சுய விருப்பப்படி, எந்த நேரத்திலும் இந்தச் காயின்கள் கொள்கையின் பகுதிகளை மாற்ற எங்களுக்கு உரிமை உள்ளது. இதை நாங்கள் செய்தால், மாற்றங்களை இந்தப் பக்கத்தில் நாங்கள் இடுகையிட்டு இந்த விதிமுறைகள் இறுதியாகப் புதுப்பிக்கப்பட்ட தேதியை இந்தப் பக்கத்தின் மேலே குறிப்பிடுவோம்.