Skip to main content

சாட்ரூம் கொள்கை

Last updated: 25th July 2021

https://sharechat.com/ -இல் உள்ள எங்கள் வலைதளம் மற்றும்/அல்லது ஷேர்சாட் மொபைல் செயலியில் (கூட்டாக, "ப்ளாட்ஃபார்ம்") இருக்கும் எங்கள் சாட்ரூம் அம்சத்தின் ("அம்சம்") உங்கள் பயன்பாட்டை இந்தச் சாட்ரூம் கொள்கை ("சாட்ரூம் கொள்கை") நிர்வகிக்கிறது, மேலும் இது, எண். 2 26, 27 1ஆம் தளம், சோனா டவர்ஸ், ஓசூர் சாலை, கிருஷ்ணா நகர், தொழிலகப் பகுதி, பெங்களூரு, கர்நாடகா 560029 என்ற முகவரியில் பதிவு செய்யப்பட்ட அலுவலகத்தைக் கொண்டு இந்தியச் சட்டங்களின் கீழ் நிறுவப்பட்ட ஒரு தனியார் நிறுவனமான மொஹல்லா டெக் பிரைவேட் லிமிடெட் ("ஷேர்சாட்", "நிறுவனம்", "நாங்கள்", "எங்களை" மற்றும் "எங்களின்") என்ற நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. "நீங்கள்" மற்றும் "உங்களின்" என்ற சொற்கள் ப்ளாட்ஃபார்மின் பயனரைக் குறிக்கிறது.

நீங்கள் உங்கள் நண்பர்களுடன் தொடர்பில் இருக்கவும், உங்களுக்கு விருப்பமான பிராந்திய மொழியில் படங்கள், வீடியோக்கள், இசை, ஸ்டேடஸ் அப்டேட்கள், மற்றும் பலவற்றைப் பகிர எங்கள் ப்ளாட்ஃபார்ம் உங்களுக்கு உதவுகிறது. எங்களின் ப்ளாட்ஃபார்மில் கிடைக்கும் இடுகைகள், படங்கள், வீடியோக்களைக் காட்டவும், உள்ளடக்கத்தைப் பரிந்துரைக்கவும், நாங்கள் உங்களின் விருப்பமான உள்ளடக்கத்தைப் புரிந்துகொண்டு, உங்களின் செய்தியூட்டத்தைத் தனிப்பயனாக்குகிறோம் ("சேவை/சேவைகள்").

பொதுவான நடத்தைமுறை#

ப்ளாட்ஃபார்மில் நீங்கள் அம்சத்தைப் பயன்படுத்தும் போது, எப்போதும் பின்வரும் விதிகளை ("விதிகள்") பின்பற்றுவதாக நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். நீங்கள் செய்ய வேண்டியவை:

  • சேவையில் உண்மையான பெயர் மற்றும் அடையாளத்தைப் பயன்படுத்துதல்;

  • எங்களின் பயன்பாட்டு விதிமுறைகள் மற்றும் சமூக வழிகாட்டுதல்களைப். படித்துப் பின்பற்றுதல். இதன் பொருள் நீங்கள் மற்றவர்களிடையே:

    • எந்தவொரு நபரையும் அல்லது மக்கள் குழுக்களையும் வசை பாடுவதில், கொடுமைப்படுத்துவதில் அல்லது துன்புறுத்துவதில் ஈடுபடக்கூடாது. கண்ணியமான உரையாடல்களில் ஈடுபடுமாறு நாங்கள் உங்களைக் கேட்டுக்கொள்கிறோம்;
    • எந்தவொரு நபருக்கும் அல்லது மக்கள் குழுக்களுக்கும் எதிராகப் பாகுபாடு காட்டக்கூடாது, அவர்களிடம் வெறுப்புடனான நடத்தையில் ஈடுபடக் கூடாது, அல்லது அவர்களுக்கு எதிராக வன்முறை அல்லது தீங்கு விளைவிப்பதாக அச்சுறுத்தக்கூடாது;
    • மற்றவர்களின் தனிப்பட்ட தகவல்கள், படங்கள் மற்றும் பிற தகவல்களை அவர்களது முன் அனுமதியின்றிப் பகிரக்கூடாது, பகிர்வதாக அச்சுறுத்தக் கூடாது அல்லது பகிர்தலை ஊக்குவிக்கக்கூடாது;
    • ப்ளாட்ஃபார்மிலிருந்து பெறப்படும் தகவல்களை முன் அனுமதியின்றிப் படியெடுக்கக்கூடாது, பதிவு செய்யக்கூடாது, அல்லது மீளுருவாக்கம் செய்யக் கூடாது மற்றும்/அல்லது பகிரக் கூடாது;
    • ஏதாவது அறிவுசார் சொத்து அல்லது மற்ற தனியுரிம உரிமைகளை மீறும் எந்தவொரு உரையாடல்களிலும் நீங்கள் ஈடுபடக் கூடாது அல்லது அத்தகைய எந்தவொரு உள்ளடக்கத்தையும் பகிரக் கூடாது;
    • தவறான தகவல்கள் அல்லது தேவையற்ற தகவல்களைப் பரப்பக்கூடாது, அல்லது தகவல்களைச் செயற்கையாகப் பெருக்கவோ அல்லது குறைக்கவோ கூடாது;
    • சிறியவர்கள் உட்பட, எந்தவொரு நபருக்கும் அல்லது மக்கள் குழுக்களுக்கும் தீங்கு விளைவிக்கும் நோக்கமுடைய அல்லது வாய்ப்புள்ள தகவல்களை (அல்லது செயற்கையான அல்லது கையாளப்பட்ட ஊடகம்) பகிரவோ அல்லது ஊக்குவிக்கவோ கூடாது; மற்றும்
    • பயனர்கள் அல்லது பொதுமக்களுக்குப் பெருமளவில் தீங்கு விளைவிக்கக்கூடிய அல்லது அவர்களைத் தவறாக வழிநடத்தக்கூடிய தவறான தகவல்கள் மற்றும் பொய்யான தகவல்களைப் பரப்பக் கூடாது.
  • பொருந்தும் சட்டங்களின்படி எந்தவொரு அங்கீகரிக்கப்படாத அல்லது சட்டவிரோதமான நடவடிக்கைகளிலும் ஈடுபடும் நோக்கத்திற்காகச் சேவையைப் பயன்படுத்தக்கூடாது.

பாதுகாப்பு#

ப்ளாட்ஃபார்மில் நீங்கள் யாருடன் ஊடாட விரும்புகிறீர்கள் என்பதை நீங்கள் முடிவு செய்துகொள்ளலாம்:

  1. பின்தொடர்வதை நிறுத்துதல்: நீங்கள் எந்த நேரத்திலும் ஒரு பயனரைப் பின்தொடர்வதை நிறுத்தலாம். அவ்வாறு செய்ய, பயனரின் சுயவிவரத்திற்கு சென்று "பின்தொடர்கிறீர்கள்" என்று கூறும் பொத்தானைத் தேர்வு நீக்கம் செய்வதற்காகத் தட்டவும். அவர்களுக்குத் தெரிவிக்கப்படாது, மேலும் அவர்களின் நடவடிக்கை குறித்த கூடுதல் அறிவிப்புகளை நீங்கள் பெற மாட்டீர்கள்.

  2. தடுத்தல்: நீங்கள் எந்த நேரத்திலும் ஒரு பயனரைத் தடுக்கலாம். நீங்கள் உருவாக்கும் அல்லது நீங்கள் நடுவராக அல்லது நிர்வாகியாக இருக்கும் எந்தவொரு ரூமையும், தடுக்கப்பட்ட பயனர்களால் பார்க்கவோ அல்லது அதில் சேரவோ முடியாது.

புகாரளித்தல்#

இந்தச் சாட்ரூம் கொள்கை/விதிகள் பயனரால் மீறப்படுவதை நீங்கள் கவனித்தால், அது குறித்து contact@sharechat.co -இல் புகாரளிக்கவும். சாட்ரூம் கொள்கை மீறல்கள் குறித்துப் பல புகார்கள் வந்தால், எங்களுடனான உங்கள் கணக்கை முடிக்கவும், எங்களுடன் பதிவு செய்வதிலிருந்து உங்களைத் தடுக்கவும் நாங்கள் கட்டாயப்படுத்தப்படலாம். அத்தகைய நீக்கத்திற்கு எதிராக நீங்கள் மேல்முறையீடு செய்ய விரும்பினால், contact@sharechat.co -இல் எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

பயனர்களுக்கான குறிப்பு:#

  • மெய்நிகர் பரிசளிப்பு(விர்சுவல் கிஃப்டிங்) பரிவர்த்தனைகளை எளிதாக்குவதற்காக தொலைபேசி எண் போன்ற உங்கள் தனிப்பட்ட விவரங்களை எங்கள் கட்டண நுழைவாயில் கூட்டாளருடன் பகிர்ந்து கொள்ளலாம்.

  • ப்ளாட்ஃபார்மில் உள்ள பிற பயனர்களுடனான உங்களின் ஊடாடல்களுக்கு நீங்கள் தான் முழுப் பொறுப்பாவீர்கள், மேலும், அந்த ஊடாடல்களைப் பொறுத்தவரை நாங்கள் எவ்விதத்திலும் பொறுப்பாகமாட்டோம் என்று நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.

  • எது விதிமீறலாக அமையும் என்பதை எங்களின் சுய விருப்பப்படி நிர்ணயிக்கும் உரிமை எங்களுக்கு உள்ளது.

  • எங்களின் சுய விருப்பப்படி, எந்த நேரத்திலும் இந்தச் சாட்ரூம் கொள்கையின் பகுதிகளை மாற்ற எங்களுக்கு உரிமை உள்ளது. இதை நாங்கள் செய்தால், மாற்றங்களை இந்தப் பக்கத்தில் நாங்கள் இடுகையிட்டு இந்த விதிமுறைகள் இறுதியாகப் புதுப்பிக்கப்பட்ட தேதியை இந்தப் பக்கத்தின் மேலே குறிப்பிடுவோம்.

  • சாட்ரூம்களில் மெய்நிகர் பரிசு பெட்டி விருப்பத்தேர்வை இயக்குவதற்கு நாங்கள் உங்களிடம் ஒருபோதும் கட்டணம் வசூலிக்கமாட்டோம். அவ்வாறு செய்வதைத் தவிர்க்கவும் அல்லது இதுபோன்ற நடவடிக்கைகளை நீங்கள் ப்ளாட்ஃபார்மில் கண்டால், அது குறித்து contact@sharechat.co -இல் புகாரளிக்கவும்.